Sunday, January 11, 2009

காதல் எனும் கிணற்றில்
விழ இருந்த என்னை
நட்பு எனும் கயிறிட்டு
காத்தவளே!


கவிதை எனும் கடலில்
காதல் எனும் கரையை
நட்பு எனும் அலையால்
கவர்ந்து இழுக்கப்படதடி!

என் எதிர் காலம் மட்டும்
உன்னோடு இல்லையடி
காலம் எதிராக அமைந்ததால் !!!
உன் கண்கள் மட்டும்
இல்லை
உன் கண்களில் இருக்கும்
தூசி கூட மொழி பேசும் !

Friday, January 9, 2009

ப‌த்திரிக்கை

நீ வருவாய் என்று
கண்களை மூடவில்லை
வந்தாய்!

நீ என் பெய‌ர்
சொல்லிஅழைப்பாய் என்று
காதுக‌ளை மூடவில்லை
அழைத்தாய்!

ஆனால் நீ என்
மூச்சை அல்ல‌வா
மூடிவிட்டாய்
உன் க‌ல்யாண‌ ப‌த்திரிக்கையை
நீட்டி!!!!!!

Thursday, January 8, 2009

விடுதலை

உன் மனச்சிறையில் அடைத்து
எனக்கு
ஆயுள் தண்டனை கொடுப்பாய்
என்று நினைத்தேன்
ஆனால் நீயோ
இப்படி விடுதலை செய்து
எனக்கு தூக்கு தண்டனை
கொடுத்து விட்டாயே!!!!!!!!!

காதல் தோல்வி

தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே

நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி

நீ............!!!

என்ற
எழுத்தைக் கூட
நிறுத்த முடியாமல்
நீட்டுகிறேன்...

உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர் கொடுக்கும் நோக்கத்தில்......!!!

பலூன் வியாபாரி


காற்றி ஊதி
நிரப்பினான்
வயிற்றை
நிரப்ப...

slam book

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவிற்கான சம்மத
உடன்படிக்கை என்று.

அநாதைப் பிணம்


ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?

அழகி


என் ஊரில்
நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.

ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.
நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.
நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.
இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.

என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.
எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.

நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.

காதல்


இதயத்தின் நான்கறைகளிலும்

இடியுடன் கூடிய மழை.

உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்

என் நுரையீரலை வட்டமிட்டபடியே.

உன் நிழல் தீண்டித்தீண்டியே

என் ரேகை தேயும்.

என் நெற்றிச் சுருக்கங்களில்

உன் நினைவு விரியும்.

ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்

உன் கண்களின் கார்காலம்

என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.

மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு

மங்கலாகத் தெரிகின்றது.

இப்பொழுது என்னுடலில்

இதயம் மட்டுமே அசைகிறது.

அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?

என் மனமின்னும் மார்க்கண்டேயன்,

நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.

இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.

விலைமகள்


அசுரப் பசியால்

அவளுடைய மானம் அழிகிறது.

வறுமை வேலி தகர்த்து

அவளை ஊர் மேய்கிறது.

உடல் வாடகைக்கு விடப்பட்டதால்

அவளுடைய உயிர் வாழ்கிறது.

இரவு


பகல் இறந்துபோனதும்
இரவு கருப்பணிந்து
இரங்கல் தெரிவிக்கிறதோ?

இந்த இரவு,
ஏன் கதிரவனைக் கடன்வாங்கி
நட்சத்திரங்களாய் நறுக்கிப்போட்டது?

பகலைப் பணயம் வைத்து
இரவு போடும் ஆட்டமா இது?
வெயிலில் வறுக்கப்பட்டே
வானம் கருகிப்போனதா?

யாருமறியாமல் இரவு வேளையில்
தலை நரைத்த மேகங்கள்
தடவிக் கொண்ட சிகைச்சாயமா?

பகலே! நீ ஒரே ஒரு ஒளிதான்.
இரவைப் பார்
இதில் எத்தனை ஒளிவெள்ளம்.

நாம்


பதற்றமில்லாமல் நாம் இன்னும்
பக்கத்தில் நிற்கப் பழகவில்லை.


கைநடுங்காமல் பேனாவோ காகிதமோ
கொடுத்ததாய் தகவலில்லை.


எதார்த்தமாய் என்றாவது
நேருக்குநேர் பார்த்திருக்கிறோமா?
இயல்பாய் ஏதாவது பேசியிருப்போமா?


“சுகமா?”என்ற சம்பிரதாயங்களில்லாத
சந்திப்புகள் உண்டா?
சுற்றும்முற்றும் பார்க்காமல்
பேசிக்கொண்டதாய் செய்தியுண்டா?


இடைவெளிவிடாமல்
இருபது வார்த்தைகள்கூட
இப்போதும் பேசமுடியாது.


காலங்குலத்திற்கு மேல்
கடைசிவரை சிரித்ததுமில்லை.


ஒருநாள் குருட்டு தைரியத்தில்
கொஞ்சம் உண்மை உலறினேனே.
அன்று என் கைக்குட்டைக்கும் வியர்த்தது
உனக்குக் கட்டாயம் தெரியும்.


அரைமனதுடன் அன்பளிப்பு வாங்கி
முக்கால்மனதுடன் முகம்மலர்ந்து
பண்டிகைநாட்களில் பரிமாறிக்கொண்டோம்.


பலருடன் பழகிய அனுபவங்களிருந்தும்
பழகத்தெரியாதவர்கள் போல் நடித்தோம்.


நம் நட்புநாடகத்தில்
எதார்த்தத்திற்கு மட்டும்
எந்தக் கதாப்பாத்திரமும் தரப்படவில்லை.


சத்தியமாகச் சொல்கிறேன் தோழி!
நாம் சமூகத்தின் விமர்சனமில்லாமல்
பழகவில்லை.


தவறான கண்ணோட்டங்களிலிருந்து
தப்பிப் பழகியிருப்போமா?இல்லை.
இருந்தும் பழகிக்கொண்டுதான்
இருக்கிறோம் நண்பர்களாய்.


பாவம் தோழி!
நம் நட்பிற்கே இக்கதியென்றால்
காதலர்கள் பாவம் தோழி.

எனக்கான கவிதை

யாருடைய சாயலும் இல்லாமல்
எனக்கான கவிதையை
நான் எழுத வேண்டும்!
கடன் வாங்கா யாப்பு,
கடன் வாங்கா மொழிநடை என்று
எனக்கான கவிதை எழுத முயல்கிறேன்
யார் சாயல் அது!
முதல் எழுத்தை தொக்கி நிற்பது!
மீண்டும் புதிய சொல்லைத் தேடிப் பிடிக்க வேண்டும்.
முடிந்த மட்டும் எழுதுகிறேன்
எனக்கான கவிதையை நானே!
யாரேனும் படிப்பார்களா?
தெரியவில்லை!
பின் ஏன் எழுதவேண்டும்?
எனக்கான உறக்கம் போல!
முடித்துவிட்டேன்!
ஓ!
என்ன இது!
ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொன்றை பறைசாற்றுகிறதே!
மீண்டும் எழுதவேண்டும்
எனக்கான கவிதையை நானே!

தமிழ்ன் என்று சொல்லாடா தலை நிமிந்து நில்லடா !!

Unicode tamil converter

http://www.higopi.com/ucedit/Tamil.html

pidithavai

பழகிய சில மாதங்காலேயானலும் 
ஒரு யுகமாய் கடந்துவிட்ட எண்ணம் 

உனது பிரிவில் கூட எனக்கு இருந்த ஒரே ஆறுதல்
 கவிதை என்று நான் நினைத்தபோது 
வார்த்தைக்கூட வர மறுக்கின்றது 

அதர்க்கு கூட உன் பிரிவை 
தாங்க முடியவில்லை
 நான் என்னை மறக்கின்ற போதிலும் 
ஓரமாய் புன்னைக்கைக்கிறது ஏட்டில் 
உனக்காக நான் எழுதிய சில கவிதைகள்