உன் கைப் பிடித்து கடக்கும் அந்த இரண்டு நிமிடங்களுக்காக நிறைய சாலைகளை கடக்க விரும்புகிறது மனம்.......
Wednesday, April 28, 2010
உன் சிரிப்பை மட்டும் கடனாக கொடு மின் தடையே இல்லாத உலகை நான் உருவாக்குகிறேன்!
பிரம்மன் படைத்த சீரான அழகி நீ தான்! சீரழிக்கபட்டவன் நான் தான்!
உன் தோட்டத்து பூவெல்லாம் வாடவில்லை! உன்னை கண்டதால் அதன் ஆயுளும் கூடியதடி!
மாதம் முழுவதும் பௌர்ணமியே உன்னை பார்த்த சந்தோஷத்தில் நிலவு கூட தேய மறந்ததடி!
எனக்கு மட்டும் அடைமழை அடிக்கடி... உன் நினைவில் நனைவதால்!
என் கண்களை ஓர் நிமிடம் கடனாக கொடுக்கிறேன் கண்ணாடியை பார் நீ கூட கவிஞன் ஆகி விடுவாய் !
மரணத்தால் உன்னை மறந்திட சாத்தியமில்லையடி ... ஆனால் சத்தியமாக உன்னை மறந்தால் மரணம் தான்!
உறக்கம் கூட என் மீது இரக்கம் காட்டவில்லையடி ஆனால் மரணம் மட்டும் என் மீது நெருக்கம் காட்டுதடி !!!
எனக்கு வரவும் வேண்டாம் தச்சனையும் வேண்டாம் வரவாக நீ இருந்தால் தச்சனையாக நான் இருப்பேனடி!!!
சேற்றில் குளித்தேனடி சேற்றுத் தாமரையாய் முளைத்தேனடி ... உன் கால் தடம் அங்கே பதிந்திருந்ததால் !!!
நிலவை பார்த்ததுண்டு ரசித்ததில்லை ... ஆனால் ரசித்ததுண்டு நிலவே நீ என்று அறியாமல் !!!
Monday, April 19, 2010
மதத்தை படைத்தது பகுத்தறிவு இல்லா மனிதன் அந்த மனிதனை படைத்த கடவுளும் படிப்பறிவு இல்லாதவனோ !!!
மூக்கு கண்ணாடி அணிந்தும் உன் முகம் லட்சணமாக இருக்கிறது இது லட்சர்களில் ஒருவருக்குத்தானடி!!
இதயம் சிரித்தால் உன் பெயர் சொல்லி சிரிக்கும்... வாய் பேச தெரியாத இதயத்திற்கு மொழி கொடுத்த அவள் மொழி பேச தெரிந்த நான் இங்கு ஊமை ஆனேன் அவள் பிரிந்ததால் !!!